அம்பாறை தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு தடை

அம்மன்
அம்மன்

அம்பாறை தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பித்த சில மணித்தியாலயங்களில் பொதுமக்கள் ஆலயபகுதியில் ஒன்று கூடியதையடுத்து காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பொது சுகாதார அதிகாரிகள் ஆலயத்தை முற்றுகையிட்டு உடனடியாக ஆலய உற்சவத்தை நிறுத்தி ஆலயத்தை பூட்டவைத்து உற்சவம் செய்ய தடைவித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது..

குறித்த ஆலய வருடாந்த உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) திகதி ஆரம்பித்து திருக்கதவு திறக்கப்பட்டு 23 ம் திகதி பொங்கல் இடம்பெற்று கதவடைப்புடன் வருடாந்த உற்சவம் முடிவடையும்.

இந்த வருடாந்த உற்சவத்தையிட்டு ஆலய நிர்வாகம் காவல்துறையினரிடம் 15 பேருடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய வருடாந்த உற்சவத்தை நடாத்த அனுமதிகோரியிருந்தனர் காவல்துறையினர் அதற்கு அனுமதியளிக்காத முடியாது எனவும் கோவில் என்ற முறையில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியார் எவரும் கேவிலுக்குள்வரவிடாது கோவில் வெளிக்கதவுகளை மட்டும் பூட்டிவிட்டு 15 பேருடன் பூஜையை நடாத்துமாறு தெரிவித்தனர்.

இதனடிப்படையில் சம்பவதினமான நேற்று அதிகாலை ஆலயவண்ணக்கர் உட்பட 15 பேர் ஆலய வருடாந்த உற்சவத்தினை ஆரம்பித்து திருக்கதவு திறக்கும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஆலய வெளிப்பகுதியில் அதிகளவான பக்தர்கள் ஒன்று கூடி ஆலய கதவை திறக்க கோரினர்.

இதனையடுத்து அங்கு காவல்துறையினர் இராணுவத்தினர் பொதுசுகாதார அதிகாரிகள் சென்றதையடுத்து நாங்களும் அம்மனை தரிசிக்கவேண்டும் அவர்கள் மட்டும் தரிசிக்கலாமா என வெளியில் குழுமியிருந்த பக்தர்கள் கேள்விக்கணையிட்டதையடுத்து காவல்துறையினர் உடனடியாக ஆலய உற்சவத்தை செய்வதற்கு தடை செய்ததையடுத்து ஆலயத்தின் பூஜையுடன் பிற்பகல் 2 மணியுடன் ஆலயத்து கதவை பூட்டி அங்கிருந்து அனைவரும் வெளியேறியதுடன் ஆலயத்தின் முன்னால் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.