சீனாவில் இருந்து 14 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 4
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 4

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் யூன் மாத ஆரம்ப பகுதியில் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் செவ்வாய் கிழமை குறித்த 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடையும் எனவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.