கொரோனா தொற்றாளர் ஒருவர் ஊடாக 30 நாட்களில் 406 பேருக்கு பரவும்

download 1 40
download 1 40

கொவிட் -19 தொற்றுக்குள்ளான நபரொருவர் சமூக இடைவெளி, தனிமைப்படுத்தலை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்தால் 30 நாட்களில் 406 பேருக்கு அவரிடமிருந்து கொரோனா தொற்று பரவும் என கலிபோர்னியாவில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்து, முகக்கவசம் அணியாத கொரோனா தொற்றுடைய ஒருவருடன் பேசினால் தொற்றால் பாதிக்கப்படாத அந்த நபருக்கு 30 சதவீதம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், தொற்றுக்குள்ளான நபரும், தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணிந்திருந்து பேசினால், 1.5 சதவீதம் மட்டுமே தொற்றால் பாதிக்கப்படாத நபருக்கு பரவகூடும்.

எனவே கொரோனா தொற்றுள்ள நபர் சமூக இடைவெளி வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 50 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவரால் 406 நபர்களுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள்.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 75 சதவீதம் சமூக இடைவெளியை பின்பற்றினால் அவர் மூலம் வெறும் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் இலட்சக்கணக்கானவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.