லக்ஷ்மன் கிரியெல்லவின் கேள்விக்கு பதிலளிக்க தடுமாறிய ஜீ.எல்.பிரீஸ்

download 72
download 72

எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தடுமாற்றமடையும் நிலை சபையில் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றும்போது, கொழும்பு துறைமுக நகரம் அரச கம்பனியாகவே செயற்படும்.

அதனால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழே இடம்பெறும் என தெரிவித்தார்.

இதன்போது சபையில் இருந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சட்டப்பிரச்சினை ஒன்றை எழுப்பி, கொழும்பு துறைமுக நகரம் அரச கூட்டுத்தாபனம் என சட்டமூலத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

நீங்கள் கூறுவதுபோல். அது அரச கூட்டுத்தாபனம் என்றால், துறைமுக கணக்கறிக்கை, மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் நாடாளுமன்ற அரச பொது முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க கணக்குள் பற்றிய குழுவுக்கு இருக்கின்றதா இல்லையா என்பதை தெரிவிக்கவும் என்றார்.

இதற்கு அமைச்சர் உடனடியாக பதிலளிக்க தடுமாறி நிலையில், கொழும்பு துறைமுக நகரின் கணக்குள் பற்றிய கணக்காய்வு, அரச கணக்காய்வாளர் நாயகத்தினாலே இடம்பெறும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து விடயங்களும் உள்ளக்கப்பட்டிருக்கின்றன. அதுதான் அரசாங்கத்தின் கொள்கை என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, கொழும்பு துறைமுக நகர் அரச கூட்டுத்தாபனம் என்றால், அதனை நாடாளுமன்ற அரச பொது முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க கணக்குள் பற்றிய குழுவுக்கு இருக்கின்றதா இல்லையா என்பதை மாத்திரம் தெரிவிக்கவேண்டும் என்றார். என்றாலும் அமைச்சர் ஜீஎல்.பீரிஸ் மழுப்பும் வகையில் பதில் ஒன்றை வழங்கி அமர்ந்துகொண்டார்.