கைப்பற்றப்பட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள்!

5ae63e0d gd
5ae63e0d gd

அநுராதபுரம் இராஜாங்கனை யாய – 5 பகுதியின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள், நேற்று முன்தினம் நுகர்வோர் அதிகார சபையின் அநுராதபுர புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி பி. ஏ. சி. பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுதர்சனம் திஸாநாயக்கவின் உத்தரவின் படி இந்த கைப்பற்றப்பட்ட உரங்களை இராஜாங்கனை பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பிரதேசத்தின் உர வியாபார முகவரொருவரினால் குறித்த உரங்களை புத்தளம், கல்பிட்டியிலுள்ள வியாபாரி ஒருவருக்கு ரூபா 2500 வீதம் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லப்படும்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உரங்கள், ஒரு மூட்டை ரூ .1500 படி விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைய 800 உர மூட்டைகளையும் ரூபா.1500 வீதம் இராஜாங்கனை சந்தி உர வியாபார முகவரினூடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.