திருகோணமலையில் 6 பேர் உயிரிழப்பு; 61 பேருக்கு கொரோனா!

corona deth
corona deth

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து 2695 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 6 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தி உயிரிழந்ததையடுத்து இந்த 3 அலையில் இதுரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை குறிஞ்சாக்கேணி மற்றும் உப்புவெளி  சுகாதார வைத்திய அதிகாரிகள்  பிரிவுகளில் தலா 8 பேர் வீதம் 16 பேரும், கிண்ணியா மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 7 பேர் வீதம் 14 பேரும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், கந்தளாய், கோமரங்கடவை, தம்பலகாமம் ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா இருவர் வீதம் 6 பேர் உட்பட 61 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரை 1254 கொரோனா தொற்று ஊறதி கண்டறியப்பட்டதையடுத்து 2695 ஆக அதிகரித்துள்ளதுடன் இந்த 3 அலையில் திருகோணமலையில் 13 பேரும், கிண்ணியாவில் 17 பேரும், குறிங்சாக்கேணி 9 பேரும், உப்புவெளி 12 பேரும் , மூதூர் 5 பேரும்.  கந்தளாய் 3 பேரும். குச்சவெளியில் ஒருவர் உட்பட 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள்; சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி வீடுகளில் இருந்து வெளியே செல்லாது கவனமான செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்