இன்றைய காலநிலை

Rainning
Rainning

நாட்டில் இன்றைய தினம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மி.மீ.க்கு அதிகளவான நீர்வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவில் மழை பெய்யும் அதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் இலங்கை தீவின் மீது சில நேரங்களில் காற்றின் வேகம் (40-50) கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும். குறிப்பாக காற்றின் வேகம் மத்திய மலைகளின் மேற்கு சரிவில், வடக்கு, வடமத்திய, வடக்கு ஆகிய மாகாணங்களில் சில நேரங்களில் (50-55) கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கலாம்.

மேற்கு, மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டா மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்காலங்களில் ஏற்படிக்கூடிய வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.