சினோபார்ம்’ கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றல் வடக்கிலும் ஆரம்பம்!

download 1 45
download 1 45

சீன அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் ஒரு தொகுதி வடக்கு மாகாணத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் கொவில்ஷிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றும் பணிகள் வடக்கில் தற்போதும் நடைபெறுகின்றன.

இந்தநிலையில், கொவில்ஷிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் முதலாவது டோஸாக வழங்கப்பட்டு வருகின்றன.