கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பின் காரணமாக தூக்கி எறியப்பட மீனவர்களின் வாடிகள்!

DSC 0024
DSC 0024

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் இன்றையதினம் திங்கட்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பின் காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி எறியப்பட்டதுடன் படகுகள் மற்றும் மீன்பிடிவலைகளும் சேதமாகியுள்ளது.

செளத்பார், தாழ்வுபாடு, ஓலைத்தொடுவாய், வங்காலை அச்சங்குளம் உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து அதிவேக காற்று மற்றும் கடல் கொந்தழிப்பு காணப்படுவதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது. அதே நேரம் மன்னார் செளத்பார் பகுதியில் உள்ள கடற்படை முகாமும் சேதமடைந்துள்ளது. தொடர்சியாக காற்று வீசுவதால் பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

கொரோனா காரணமாக வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அரசாங்கம் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்திற்கும் சேதமான வாடிகள் மற்றும் படகுகளை புனர்நிர்மானம் செய்வதற்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.