பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

mushfiqurrahim11 1621942024
mushfiqurrahim11 1621942024

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 247 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மொஹமதுல்லாஹ் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகென் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் மழை குறுக்கிட்ட காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.