வவுனியாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா

big 165616 Coronavirus 1 2
big 165616 Coronavirus 1 2

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், நெளுக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், எருகலங்கல் பகுதியில் ஒருவருக்கும், கந்தபுரம் பகுதியில் ஒருவருக்கும், தவசியாகுளம் பகுதியில் ஒருவருக்கும், கிடாச்சூரி பகுதியில் ஒருவருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.