இறப்பர் தொழிற்துறையில் இலை சோர்வு நோய் தாக்கம்

rubber 1600x600 850x460 acf cropped 1
rubber 1600x600 850x460 acf cropped 1

நாட்டின் இறப்பர் தொழிற்துறையில் கடந்த சில நாட்களாக பெஸ்டலோசியோப்சிஸ் எனப்படும் இலை சோர்வு நோய் நிலை ஏற்படுவதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

வழமையாக பெப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் சீரற்ற வானிலை மற்றும் ஒய்டியம் குறைப்பாடு காரணமாக இலை சோர்வு நோய் ஏற்படும்.

எனினும் இந்த ஆண்டு மே மாதத்திலும் இலை சோர்வு ஏற்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நோய் நிலை வெகுவாக ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.