நாட்டின் சிலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்

Rainning
Rainning

நாட்டில் இன்றைய தினம் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய , வடமேற்கு ஆகிய மாகாணங்கள் மற்றும் காலி ,மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில வேளைகளில் மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதேவேளை தீவு முழுவதும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக மத்திய மலைகள், வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

எனவே ஆபத்துக்களை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.