முல்லைதீவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு!

IMG 20210530 WA0037 1
IMG 20210530 WA0037 1

முல்லைத்தீவு மாவட்ட செயலர் திரு.கே.விமலநாதன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் .எம்.உமாசங்கர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக 28.05.2021 அன்று ஓர்ஹான்( ORHAN) நிறுவன கெளரவ செயலாளர் திரு. சு.ஜெயச்சந்திரன் அவர்களால் ரூபா 175200/= பெறுமதியான சலவை இயந்திரம், நுளம்புவலை, தலையணை,தலையணை உறை,முகக்கவசங்கள்,படுக்கை விரிப்புகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சுவிட்சர்லாந்து விஜய் அறக்கட்டளையுின் (Vijai Foundation )நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.

IMG 20210530 WA0035 1
IMG 20210530 WA0035 1

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.கிருபாசுதன்,செயலக பணியாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணியாளர்கள் மற்றும் ஓர்ஹான்(ORHAN) நிறுவன நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திரு. இ.திவாகர், நிர்வாக உத்தியோகத்தர் திரு.ப.அமுதாவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.