கிளிநொச்சி வைத்தியசாலையில் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை விடுதியை பார்வையிட்ட நா.உ அங்கஜன் இராமநாதன்!

IMG 20210601 160843
IMG 20210601 160843

கிளிநொச்சி வைத்தியசாலையில் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை விடுதி மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டார்.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அங்கயன் இராமநாதன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுவரும், கொரோனா தொற்றாளர்களிற்கான விடுதி, அவசர சிகிச்சை நிலையம், சத்திர சிகிச்சை நிலையம், அன்டியன் பரிசோதனையிடம் உளிட்ட பகுதிகளின் பணிகளை பார்வையிட்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளுதல், அவர்களிற்கான முடிவுகள் கிடைக்கும்வரை காத்திருக்கும் பகுதி, தொற்றாளர் என அடையாளம் காணும் பொருட்டு அவரை அனுமதிப்பதற்கான விடுதி, தொற்றாளருக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை கூடம் உள்ளிட்டன கிளிநொச்சி வைத்திய சாலையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வைத்தியசாலையின் தேவைகளையும் கேட்டறிந்த அவர், குறித்த பகுதிகளையும் பார்வையிட்டார்.

உடனடியாக தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் தரித்து நிற்பதற்கான கொட்டகையை அமைத்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், உள்ளக வீதி அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு உறுதியளித்திருந்தார்