பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகளை வவுனியா வடக்கு மாணவர்கள் குறைந்தளவிலேயே பெற்றுள்ளனர்!

IMG 7237 1
IMG 7237 1

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகளை வவுனியா வடக்கு மாணவர்கள் குறைந்தளவிலேயே பெற்றுள்ளனர் 2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையெட்டினை மாணவர்களுக்கு வழங்க யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் வவுனியா வடக்கு மாணவர்கள் குறைந்தளவிலளயே பெற்றுள்ளதாக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அப் பிரதேச மாணவர்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் பழைய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள இராமச்சந்திராஸ் புத்தக நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே மாணவர்கள் தங்களது பாடசாலை அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரிவுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி கருத்தரங்கொன்றும் வவுனியா வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கருத்தரங்கு 04.06.2021 காலை 9 மணி முதல் ZOOM(சூம்) ஊடாக இடம்பெறும்.

இதற்கான முகவரி:

Meeting ID: 670 192 6578
கடவுச்சொல்: UAH@900Am
Attachments area.