யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார்! – இராணுவத் தளபதி அறிவிப்பு

71655ba6 saventhirasilvasep15
71655ba6 saventhirasilvasep15

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.”

என்று கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் பணிப்பில் 2 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

யாழ். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் மேலும் தடுப்பூசிகளை யாழ். மாவட்டத்துக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் – என்றார்.