கொழும்புக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

traffic
traffic

அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்புக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பில் ஆராய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கொழும்புக்குள் அத்தியாவசிய தேவைக்கென பிரவேசிப்போர் உண்மையிலேயே குறித்த தேவைக்காகத்தான் வருகைத் தந்துள்ளனரா? என்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட 6 குழுக்களும் ஆராயும்.

இதன்போது பொய்யான தகவல்களை வழங்கி அநாவசிய தேவைகளுக்காக கொழும்புக்கு வந்துள்ளமை தெரிய வந்தால் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.