யாழ் போதனா வைத்திய சாலையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

20210605 101245
20210605 101245

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

20210605 100906

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.

20210605 101327 1

கொரோனா தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது. பெருமளவானோர் தமக்கான கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.