வாழைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் வீட்டிற்கே பொருட்கள் வினியோகம்

01 1 3
01 1 3

வாழைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கை வாழைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள சகல கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதாக வாழைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எஸ்.டிலக்ஷன் தெரிவித்தார்.

01 3

அந்த வகையில் அரிசி¸ பருப்பு¸ சீனி¸ தேயிலை, பால்மா உட்பட இன்னும் பல அத்தியவசியப் பொருட்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வாகனத்தில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு கொண்டு வரப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

01 2

அத்தோடு விசேடமாக பொருட்களை முன்கூட்டியே ஒழுங்கு செய்பவர்களுக்கு முச்சக்கர வண்டியில் அவர்களின் வீட்டிற்கே கொண்டுவந்து தருவதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளது. பொருட்கள் ஒழுங்கு செய்வதற்கு 065-2257224, 077-6661856 குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சங்க முகாமையாளர் எஸ்.டிலக்ஷன் தெரிவித்தார்.