முல்லைத்தீவு உப்புமாவெளியில் பாரிய மணல் அகழ்வு

received 512357893243667
received 512357893243667

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை (06) சென்றிருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

உப்புமாவெளி பிரதேசத்தில் 5 ஆயிரம் டிப்பர்களில் ஏற்றக்கூடிய மண் குவியல் குவிக்கப்பட்டுள்ளது.
இது ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணி என்று சொல்ல முடியும். தற்போது ஆயர் இல்ல காணியில் இரண்டு வகையான மணல் அகழ்வுகள் நடைபெறுகின்றன. இது குறித்து ஆயர் இல்லத்தினர் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தும் இதுவரை நிறுத்தப்படவில்லை தற்போதும் ஆயர் இல்லத்திற்கு பத்து இலட்சம் பணம் சென்றுள்ளதாக அறிகின்றேன்.

நாட்டில் மக்கள் பயணத்தடையினால் முடக்கப்பட்ட நிலையில் இந்த மணல் குவிப்பு இடம்பெற்றுள்ளது.இதற்கு முற்று முழுதான பொறுப்பு ஆயர் இல்லம் தான் சொல்லவேண்டும். சட்டரீதியான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது விரைவில் இது நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.