உலக பெருங்கடல் தினம் இன்று

ocean day
ocean day

கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது.

உலகப் பெருங்கடல் தினத்தை ஆண்டுதோறும் யூன் 8ஆம் திகதி கடைப்பிடிக்க வேண்டும் என, 1992ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது.

2008 ஆம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் யூன் 8ஆம் திகதி ‘உலகப் பெருங்கடல் தினம்’ ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.