5000 ரூபா பணத்தினை கேட்ட மக்களை காவற்துறையினரிடம் பிடித்து கொடுப்பேன் என அச்சுறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்!

IMG 20210608 WA0017
IMG 20210608 WA0017

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் 5000ரூபா கொடுப்பனவு உரிய முறையில் கொடுக்கப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வவுனியா – செட்டிக்குளம் – மெனிக்பாம் பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவும், 5000 ரூபா கொடுப்பனவும் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை எனவும், மூன்று நாட்களாகியும் இதுவரை அநேகமானவர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் மெனிக்பாம் கிராம மக்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.

IMG 20210608 WA0015

நேற்றைய தினம் (7) மக்கள் உதவிப் பணத்தினை பெற்றுக்கொள்ள சென்றபோது பணம் வழங்க வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் சமுர்த்தி உள்ளவர்களுக்கு மட்டும்தான் பணம் வழங்குவோம் என்றும், ஏனையோருக்கு பணம் வழங்க முடியாது என்றும், தேவையெனில் பிரதேச செயலகத்தில் வந்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறும், இங்கு தரமுடியாது எனவும் கூறி மக்களை திருப்பியனுப்பியுள்ளார்.

IMG 20210608 WA0018 1

இந்நிலையில் இன்றையதினமும் (8) மக்கள் பொதுநோக்கு மண்டபத்தில் உதவி தொகையினை பெறுவதற்கு
காலை 11 மணிவரை காத்திருந்த வேளையிலும் எவரும் அங்கு வராமையினால் ஏமாற்றத்துடன் குறித்த கிராம மக்கள் திரும்பிச்சென்றுள்ளனர். அத்தோடு கொடுப்பனவினை வழங்குமாறு மக்கள் குறித்த கிராமத்தினுடைய சமுர்த்தி உத்தியோகத்தரை கேட்ட போது காவற்துறையினரிடம் பிடித்து கொடுப்போம் என அச்சுறுத்தியதாகவும், இக்கிராமத்தில் கொடுப்பனவு முறைகேடான முறையில் வழங்கப்படுவதாகவும், உரிய முறையிலே வறுமை கோட்டிற்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கு இந்த பணம் சரியான முறையிலே செல்லவில்லை என்றும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.