பெருந்தோட்டங்களில் நாளை மறுதினம் முதல் தடுப்பூசி – ஜீவன் தொண்டமான்

Jeevan Thondaman2
Jeevan Thondaman2

பெருந்தோட்டப்பகுதிகளில் நாளை மறுதினம் முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் முன்கள உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு தற்பொழுது 50,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதியுடனும் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடி மேலும் 50,000 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகின.

அந்தவகையில், முதற்கட்டமாக ஹப்புத்தளை – பிரதேச செயலகத்திலும், பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், எல்ல- கித்தால்எல்ல பகுதியிலும் இந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம்பெற்றதாக பெருந்தோட்டத்துறைக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்