கொரோனா ஒழிப்புக்கு தன்னார்வப் படையணி! – சுகாதார அமைச்சு தீர்மானம்

சுகாதரா அமைச்சு 2
சுகாதரா அமைச்சு 2

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களைக் குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்துக்குப் பிரவேசித்து இதற்காகப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காகப் பங்களிப்பு செய்வதற்கு ஏராளமான மக்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது