சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து வந்தவர் பிணையில் விடுதலை!

received 312687053653551
received 312687053653551

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் 11.06.21 இன்று முன்னிலைப்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை 02 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 31 அகவையுடைய இளைஞன் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து நாகபட்டினம் ஊடாக யாழ்ப்பாணம் பருத்துறைக்கு கடந்த 12.03.21 அன்று சட்டவிரோதமாக படகில் வந்திறங்கியுள்ளார்.

இந்தியாவில் இருந்து மூவர் படகுமூலம் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நாட்டிற்குள் வருகைதந்த நபர் வவுனியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில் தகவலறிந்த காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டபோது 10.06.21 அன்று முள்ளியவளை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவரை முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றத்தில்  நீதிபதி ரி.சரவணராஜா அவர்களிடம் முன்னிலைப்படுத்தியபோது குறித்த நபரை 5 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 25.11.21 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.