மருதமடு திருவிழாவில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை

DSC 2298
DSC 2298

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

-மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ளது.இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக ஆடி மாத திருவிழாவை நடாத்த வேண்டியுள்ளது.

எனவே இம் முறை யாத்திரிகர்கள் , பக்தர்கள் மருதமடு அன்னையின் ஆடி மாதம் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழாவிற்கு மன்னார் மறைமாவட்டத்தை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.

பக்தர்கள் வழமையாக ஆயிரக்கணக்காக குறித்த திருவிழாவிற்கு வந்து மருதமடு அன்னையை தரிசித்துச் செல்வார்கள்.

எனவே நாங்கள் எதிர் வரும் யூன் மாதம் 23 ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றத்தினை நடாத்துவோம்.

அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலிகளும் இடம் பெறும்.ஆனால் குறித்த நவ நாள் திருப்பலிகளுக்கு 15 நபர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.