தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60% தோல்வியடைந்துள்ளது – இலங்கை ஆசிரியர் சங்கம்

online class 1200
online class 1200

நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற தொலைக்காணொளி மூலமான கல்விமுறை 60 சதவீதம் தோல்வி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

தொலைக்காணொளி மூலமான கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் தொலைக்காணொளி கல்வி முறைமையில் நிலவும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு இல்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பிபில – லுணுகல – பல்லேகுருவ பகுதியில் தொலைத்தொடர்பு வசதி இன்மையால்  பாடசாலை மாணவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக மாணவர்கள் மரங்களின் மீதும் வீட்டு கூரைகளின் மீதும் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.