போலி மருத்துவர் கைது

kaithu
kaithu

பொகவந்தலாவை பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்ற போலி கால்நடை மருத்துவரை பொகவந்தலாவை காவல்துறையினர் நேற்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று கொட்டகலை பகுதியிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு சந்தேகநபர் வந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதுபோன்று தோட்டப்புறங்களில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளிடம் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து பணம் பெற்றுவருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.