இலங்கையின் நிலைமை மோசம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.

வாசன் ரட்ணசிங்கம் 1
வாசன் ரட்ணசிங்கம் 1

“இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 5 தொடக்கம் 10 பேருக்கு ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்படும் நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் குணமடைந்து வீடு செல்பவர்களின் வீதமும் சரிவடையத் தொடங்கியுள்ளது. இது ஆபத்தானபோக்கு என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.”

  • இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் புத்தாண்டு கொத்தணிக்கு முன்னர், அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் உயிரிழப்போரின் சதவீதம் 0.4 ஆக இருந்தது. புத்தாண்டுக் கொத்தணி ஆரம்பித்த காலத்தில் இது 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது நேற்றுமுன்தினம் இது ஒரு சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், புத்தாண்டுக் கொத்தணிக்கு முன்னர் வரையில் தொற்றுக் குணமடைந்து வீடு செல்வோரின் சதவீதம் 88 ஆகக் காணப்பட்டது. தற்போது 84 சதவீதமாக அது குறைவடைந்துள்ளது. இவை எல்லாம் ஆபத்தான போக்கையே காண்பிக்கின்றன” – என்றார்.