கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, மட்டக்களப்பு- பெரியகல்லாறு பிரதான வீதியில் வைத்து எதிரே வந்த அரச திணைக்கள வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கம்பஹாவில் இருந்து அம்பாறை நோக்கி, கொரோனா நோயாளர்கள் 27 பேரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றே, இவ்வாறு இன்று (21) விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனியார் பேருந்தும் திணைக்கள வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எந்ததொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.