யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் வழங்கி வைப்பு

VideoCapture 20210622 115052
VideoCapture 20210622 115052

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மூன்று வென்டிலேட்டர் கருவிகள் இன்றைய தினம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மத அனுஷ்டானங்களுடன் வென்டிலேட்டர் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

13.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் காலமான தம்மிக பெரேராவின் தகப்பனாரான திரு கே.டி.சிரிசேன,அவரின் மாமனாரான வில்லியம் ஆரியராஜா ஆகியோரின் நினைவாக இந்த நன்கொடை அவர்களது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தம்மிக பெரேரா அவர்களின் தாயாரான சுமனா முனசிங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென கருதி இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

மிகவும் இக்கட்டான கொரோனாக் காலகட்டத்தில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளின் தேவை மிக அவசியமானதென வைத்தியசாலையின் பணிப்பாளர் சிறீபவானந்தராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் ,பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தம்மிக்க பெரேராவின் குடும்பத்தினர்கள் பங்குபற்றினர்.