புதுக்குடியிருப்பில் அரச காடழித்து கைதானவர்கள் பிணையில் விடுதலை!

DSC08126 1024x576 1 696x392 1
DSC08126 1024x576 1 696x392 1

புதுக்குடியிருப்பில் அரச காடு அழிப்பு தொடர்பில் 22.06.21 அன்று எட்டுபேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை சொந்த பிணையில் மன்று விடுதலை செய்துள்ளது.
நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திம்பிலி குளத்திற்கு சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப்பகுதிகள் கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோம்பாவில் கிராம சேவையாளரினால் அடையாயப்படுத்தப்பட்ட நபர்களின் பெயர்களுடன் கடந்த 20.06.21 அன்று புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணிஅபகரிப்பினை மேற்கொண்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று(22.06.21) விசாரணை செய்யப்பட்டு கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அனைவரும் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்
குறித்த வழக்கு எதிர்வரும் 02.11.21 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட திகதியிடப்பட்டுள்ளது.