இன்று இதுவரையில் 1,917 பேருக்கு கொரோனா!

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 3
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 689 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,917 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 248,026 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,639 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 212,825 ஆக அதிகரித்துள்ளது