போதைப்பொருள் கடத்தல் ;நால்வர் கைது

kaithu
kaithu

அங்குலான – கல்தேமுல்ல பகுதியில் 100 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 40 போதைப்பொருள் பைக்கற்றுகளை முச்சக்கர வண்டி ஊடாக கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவரின் தகவலையடுத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவ பகுதியைச்சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை களனி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் நேற்று(27) மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு திடீர் சோதனையில் இரு சந்தேக நபர்களுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களிடமிருந்து 40.16 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 350 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.