முகநூல் கடத்தல் சம்பவம் : கைதான மூவரும் நீதிமன்றில் முன்னிலை

kaithu
kaithu

கண்டி – பலகொல்ல, அம்பிட்டிய பகுதியில் முகப்புத்தகம் பதிவு ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேரை கடத்திச் சென்று மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அம்பிட்டிய பகுதியில் கைதான 3 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அம்பிட்டிய – தலுக்கோல்ல மற்றும் கண்டி – ரஜபிஹில்ல மாவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 9210 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சிற்றுந்தின் சாரதி நேற்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.