ரத்மலானை அஞ்சுவின் உதவியாளர் கைது

kaithu
kaithu

பல குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டுவந்த “ரத்மலானை அஞ்சுவின்” உதவியாளர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாய்க்கு தப்பிச் சென்ற 22 வயதுடைய மதுஷங்கா சில்வா அல்லது மத்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது இவரிடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.