நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்கள் விபரம்

1625034638 1625029796 1
1625034638 1625029796 1

நேற்றைய தினம் (29) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 348 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,717 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 8 பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.