விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நில அதிர்வு

image 8f59d18a25
image 8f59d18a25

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பதிவாகியிருந்த நில அதிர்வுகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதால், விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் கண்டியில் உள்ள திகன, தெல்தெனிய மற்றும் குண்டசாலை ஆகிய இடங்களில் பல நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

நில அதிர்வு குறித்து ஆராய்ந்து, அறிக்கையை சமர்ப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர நிபுணர்களின் குழுவை நியமித்தார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்க அணையை பாதிக்கவில்லை, இருப்பினும் ஒரு விரிவான ஆய்வு தேவை என குறித்த குழுவினர் தெரிவித்தனர்.

அதன் பின்னர், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது.

ஆயிவின் முடிவில், குறைந்தது ஆறு மாத நில அதிர்வுத் தரவைப் பெறுவதற்கு இப்பகுதியில் குறைந்தது 10 உயர் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை நிறுவ பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.