தாதியர்கள் வேலைநிறுத்தம்; நோயாளர்கள் கவலை

வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் நோயாளிகள் அவதி 640x360 1
வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் நோயாளிகள் அவதி 640x360 1

பதவி உயர்வு மற்றும் தாதிய யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பல வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றும், நாளையும் இந்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் என்பனவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பல வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.