மிஹிந்தலை பிரதேச உப தவிசாளர் உள்ளிட்ட மூவருக்கு 15ஆம் திகதி வரை விளக்கமறியல்

download 1 4
download 1 4

கல்கிசையில் சிறுமியொருவரை பணத்துக்காக இணையம் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்க உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இந்நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.