களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நிலையம்!

1581912705136
1581912705136

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 3ஆவது கொவிட் – 19 சிசிக்சை நிலையமாக இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

50 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய இந்த சிகிச்சை நிலையத்திற்கான மருத்துவ உபகரணங்களை, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆ.எம்.தௌபீக், களுவாஞ்சிகுடி, ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதனிடம் கையளித்துள்ளார்