ஜனாதிபதி சர்வகட்சி மாநாடொன்றுக்கு அழைப்புவிடுக்கவேண்டும் என்கிறார் கரு!

யளயள
யளயள

மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையிலான தீர்வொன்றைக் கண்டறிவதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி சர்வகட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில், இது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் ஒருமித்த கருத்தைக்கோரவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே சீர்குலைந்திருக்கும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும். எனவே மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தக்கூடியவாறான ஒன்றிணைந்த தீர்வைக் கண்டறிவதற்கு சர்வகட்சி மாநாடு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்புவிடுக்கவேண்டும் என்றார்.