க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

news 2006 5 images newsSri Lanka AL Exam
news 2006 5 images newsSri Lanka AL Exam

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இணையத்தளம் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாடசாலை மூலப் பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்பப்படிவங்களை நாளை முதல் எதிர்வரும் 30 ஆம்திகதி வரை இணையவழியாக சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.