மேல் மாகாணத்திலும், 7 மாவட்டங்களிலும் நாளை முதல் தடுப்பூசி!

vikatan 2021 06 050376d9 f611 4a67 bb99 62414380c6b8 vikatan 2021 04 b52fa458 0558 4dbf a52e c762bfd8ef12 AP21112393563171
vikatan 2021 06 050376d9 f611 4a67 bb99 62414380c6b8 vikatan 2021 04 b52fa458 0558 4dbf a52e c762bfd8ef12 AP21112393563171

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை உள்ளிட்ட பல நடமாடும் தடுப்பூசி செலுத்தல் நிலையங்களில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவ மருத்துவக்குழாமின் ஒத்துழைப்புடன் கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கும் மேற்பட்டோருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலை, பத்தரமுல்ல தியத்த உயன, பனாகொட போதிராஜாராமய, வேரஹெர முதலாவது மருத்து படையணி உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் அந்தந்த பகுதிகளிலுள்ள இராணுவ வைத்தியசாலைகள், பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ள இடங்கள் வருமாறு:

பதுளை மாவட்டத்தில் – பாதுகாப்பு படைப்பிாிவு தலைமையகம், தியத்தலாவை

கிளிநொச்சி – இராணுவ வைத்தியசாலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் – புதுக்குடியிருப்பு தமிழ் வித்தியாலயம்

காலி – வித்யாலோக்க வித்தியாலயம், காலி

மாத்தறை – மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம், மாத்தறை

அநுராதபுரம் – இராணுவ வைத்தியசாலை

பொலன்னறுவை மாவட்டத்தில் – காலாட்படை பயிற்சி கல்லூாி, மின்னேரியா

கொழும்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.