அத்தியாவசிய சேவை என கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு

b70f91c1 2b6a 4b42 8270 8d22f2568f40
b70f91c1 2b6a 4b42 8270 8d22f2568f40

வவுனியாவில் அத்தியாவசிய சேவைகள் என தெரிவித்து பார ஊர்தியில் மாடு கடத்தப்பட்டதை நெளுக்குளம் காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.

பார ஊர்தியில் அத்தியாவசிய சேவை என பதாதையொன்றை காட்சிப்படுத்தி மாடுகள் கடத்தப்படுவதாக நெளுக்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி நிரோசன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து செயற்பட்டு பார ஊர்தியை கைப்பற்றினர்.

புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வைத்து பார ஊர்தியை கைப்பற்றிய காவல்துறையினர் பார ஊர்தியில் எவ்வித அனுமதியும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டனர்.

இந் நிலையில் நாளை மாடுகளை கடத்தி சென்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.