தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்
தொடர் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

தங்களது கோரிக்கைகளுக்கு இன்றைய தினத்திற்குள் உரிய தீர்வு வழங்காவிடின் நாளை முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் முதல் சுகயீன விடுமுறை எடுத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதுடன் இன்றைய தினமும் உரிய தீர்மானம் வழங்கப்படவில்லை எனில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.