வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்

IMG ead176766dcfc66af72c02e2d8e31cde V
IMG ead176766dcfc66af72c02e2d8e31cde V

வவுனியா குடியிருப்பு, பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியா நகரப்பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வருகைதந்த பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.