மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

pfizer vaccine 02
pfizer vaccine 02

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி 26,000 டோஸ்பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைசர் தடுப்பூசிகளின் 26 ஆயிரம் டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை மொத்தமாக 8,571,000 கொவிசீல்ட், சினோபார்ம், ஸ்புட்னிக் வி மற்றும் பைசர் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் 5,330,492 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.