மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு தொடர்பான பாதுகாவலருக்கு 26ம் திகதிவரை விளக்கமறியல்

gun 1
gun 1

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாது காவலரை எதிர்வரும் 26 ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார்.

கடந்த யூன் மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்துவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது இதன்போது குறித்த நபரை கொரோனா காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது

இதன்போது சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.